ஆசிய கோப்பை: இந்திய வீராங்கனைக்கு அபராதம்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கவடுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆசிய கோப்பை: இந்திய வீராங்கனைக்கு அபராதம்
Published on

துபாய்,

துபாயில்நடைபெற்ற மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் ஐசிசி விதிமுறைகளை மீறிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் கிராந்தி கவடுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கிராந்தி கவடின் போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன், அவரது ஒழுக்கப் பதிவில் ஒரு டீமெரிட் புள்ளியும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஐசிசி விதிமுறைகளின் 2.5-ஐ லெவல் 1 குற்றமாக அவர் மீறியதாகக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விதி, சர்வதேச போட்டியில் ஒரு பேட்டர் ஆட்டமிழந்த பிறகு, அவரை இழிவுபடுத்தும் வகையிலோ அல்லது ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றத் தூண்டும் வகையிலோ வார்த்தைகள், செயல்கள் அல்லது சைகைகளைப் பயன்படுத்துவது தொடர்பானது.

தனக்கு விதிக்கப்பட்ட குற்றச்சாட்டையும் தண்டனையையும் கிராந்தி கௌட் ஏற்றுக்கொண்டதால், இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை தேவையில்லை என்று ஐசிசி தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com