ஆசிய கோப்பை அரையிறுதி : இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்

ஆடுகளம் மிகவும் மெதுவாக காணப்படுவதால், சுழற்பந்து வீச்சாளர்கள் கொடிகட்டி பறக்கிறார்கள்.

ஆசிய கோப்பை அரையிறுதி : இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்
Published on

துபாய்,

10-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா (3 வெற்றியுடன் 6 புள்ளி), பாகிஸ்தான் (4 புள்ளி), 'பி' பிரிவில் முதல் இரு இடங்களை பெற்ற நடப்பு சாம்பியன் இலங்கை (6 புள்ளி), வங்காளதேசம் (4 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. தாய்லாந்து, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், இந் தோனேசியா அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் முதலாவது அரைஇறுதியில் 7 முறை சாம்பியனான இந்திய அணி, 2018-ம் ஆண்டு சாம்பியனான வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 24 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21-ல் இந்தியாவும், 3-ல் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.

வெப்பம் மற்றும் காற்றில் அதிக ஈரப்பதம் நிலவும் இங்குள்ள சூழலில் ரன் குவிப்பது சவாலாக உள்ளது. அத்துடன் ஆடுகளம் மிகவும் மெதுவாக காணப்படுவதால், சுழற்பந்து வீச்சாளர்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். அதனால் தான் பெரும்பாலான பேட்டர்கள் தகிடுதத்தம் போடுகிறார்கள். 100 ரன் களுக்கு மேலான ஸ்கோரை 'சேசிங்' செய்வதே கடினமாகி விடுகிறது. எனவே 140-150 ரன்கள் எடுத்தாலே அது வெற்றிக்குரிய பாதுகாப்பான ஸ்கோராக இருக்கும் என கணிக்கப்பட் டுள்ளது.

நடப்பு தொடரில் இதுவரை நடந்துள்ள 12 ஆட்டங்களில் 8-ல் முதலில் பேட் செய்த அணியே வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com