ஆசிய கோப்பை தொடர்; சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி...!

6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் (50 ஓவர்) வரும் 30ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது.
ஆசிய கோப்பை தொடர்; சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி...!
Published on

புதுடெல்லி,

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் வரும் 30 ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் - நேபாளம் அணிகள் மோதுகின்றன.

வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்த உலகக்கோப்பை தொடருக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு ஆசிய அணிகள் இந்த ஆசிய கோப்பை தொடரை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளும்.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைக்க உள்ளார். அதன்படி ஆசிய கோப்பை தொடரில் விராட் கோலி மேலும் 102 ரன்களை அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 13,000 ரன்களை கடந்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது வீரராக இணையவுள்ளார்.

இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், குமார் சங்கக்காரா மற்றும் சனத் ஜெயசூர்யா ஆகியோருக்கு அடுத்து இவர் ஐந்தாவது இடத்தை பிடிக்க இருக்கிறார்.

மேலும் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றையும் கோலி முறியடிக்க உள்ளார். அதாவது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 13000 ரன்களை கடந்த வீரராக சச்சின் டெண்டுல்கர் 321 இன்னிங்ஸ்களில் அந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

விராட் கோலி தற்போது வரை 265 இன்னிங்சில் 12898 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 13000 ரன்களை கடந்த சச்சின் டெண்டுல்கர் 321 எடுத்ததை விட கோலி தற்போது 56 இன்னிங்சிஸ் பின்னிலையில் 12898 ரன்கள் எடுத்துள்ளார்.

விராட் கோலி 13000 ரன்களை தொட இன்னும் அவருக்கு 102 ரன்கள் தேவைப்படும் நிலையில் சச்சினின் இந்த சாதனனையை கோலி விரைவில் முறியடிக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com