

கோலாலம்பூர்,
24 அணிகள் பங்கேற்கும் 19-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி சவுதி அரேபியாவில் அடுத்த ஆண்டு (2027) ஜன வரி 7-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது சவுதி அரேபியாவில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருவதால் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. இதை யடுத்து போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என ஆஸ்திரேலியா, தென்கொரியா உள்ளிட்ட கால்பந்து கூட்டமைப்புகள் அழுத்தம் கொடுத்தன.
இந்த நிலையில் பாதுகாப்பு பிரச்சினை. தற்போதைய சூழல் குறித்து போட்டி அமைப்பாளர்களுடன் கலந்து ஆலோசித்த ஆசிய கால்பந்து கூட்டமைப்பு நிர்வாகிகள், ஆசிய கோப்பை கால்பந்து போட்டியை ஆண்டின் இறுதிக்கு தள்ளி வைத்துள்ளனர். இதன்படி ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2027-ம் ஆண்டு டிசம்பர் 23-ந் தேதி முதல் 2028-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.