ஆசிய விளையாட்டுப் போட்டி: வங்காளதேச அணி அறிவிப்பு

லிட்டன் தாஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய விளையாட்டுப் போட்டி: வங்காளதேச அணி அறிவிப்பு
Published on

டாக்கா,

ஜப்பானில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.வங்காளதேசத்தின் முன்னணி பேட்டர் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஒரு ஆண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார்.

அணியில் ஷாண்டோ இடம்பெற்றுள்ளார். அவர் கடைசியாக 2025 மே மாதம் யுஏஇ -க்கு எதிராக டி 20போட்டியில் விளையாடினார்.

லிட்டன் தாஸ் அணியின் கேப்டனாகவும், தவ்ஹித் ஹ்ரிதோய் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் ஹசன் மஹ்மூத் ஆகியோரும் அணிக்கு திரும்பியுள்ளனர்.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான வங்காளதேச அணி:

லிட்டன் தாஸ் , தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமன், சைப் ஹாசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய் , மொசாடெக் ஹொசைன், யாசிர் அலி சௌத்ரி, நஸ்ஹெத் ஹொசி, நஸ்ஹெத் ஹொசி, ரிஷா முகமது சைபுதீன், ஷோரிபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத்.

X

Daily Thanthi
www.dailythanthi.com