

டோக்கியோ,
ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் (20 ஓவர்) நிஷின் நகரில் உள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறும் இறு திப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானுடன் கோதாவில் குதிக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அபிஷேக் சர்மா அதிரடி கொடுத்தார். ஆனால் மறுபுறம் இந்தியா சில முக்கிய விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பெரிய ஸ்கோர் செய்யாமல் வெளியேறியதால், ஒரு கட்டத்தில் இந்தியா சற்று அழுத்தத்துக்குள் சென்றது
அதன்பிறகு திலக் வர்மா மற்றும் சிவம் துபே இணைந்து இந்திய இன்னிங்ஸை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறிப்பாக கடைசி ஓவர்களில் இருவரும் பவுண்டரிகள், சிக்ஸர்கள் மூலம் ரன் வேகத்தை அதிகரித்தனர். இறுதியில் திலக் வர்மா 22 பந்துகளில் 51 ரன்கள் விளாசி இந்தியாவை 200 ரன்களைத் தாண்டச் செய்தார். இந்தியா 20 ஓவர்களில் 211/6 என்ற வலுவான ஸ்கோரை பதிவு செய்துள்ளது
பாகிஸ்தான் பந்துவீச்சில் அஹ்மத் டேனியல் 3 ஓவர்களில் 43 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் எடுத்தார். சைம் அயூப் 4 ஓவர்களில் 47 ரன்களுக்கு 1 விக்கெட் எடுத்தார்.