

புதுடெல்லி,
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் வருகிற செப்டம்பர் 19-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங் கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் உத்தேச பட்டியலை இந்திய கிரிக் கெட் வாரியம், இந்திய ஒலிம்பிக் சங்கத்திடம் சமர்ப்பித்தது. 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணியில் 20 ஓவர் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில் பெயர் இடம் பெறவில்லை. 15 வயது அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி இடம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், ஆசிய விளையாட்டு போட்டிகான இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆசிய விளையாட்டு போட்டியில் கம்பீருக்கு பதிலாக இந்திய அணி தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமணன் செய்லபட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அந்த சமயத்தில் உள்ளூரில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் போட்டியில் (செப்.27-அக். 17) விளையாடுவதால் வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணிக்கு கம்பீர் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.