

நகோயா,
ஆசிய விளையாட்டில் பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியா மீண்டும் வாகை சூடியது. ஆண்கள் கிரிக்கெட்டில் (20 ஓவர்) நேரடியாக கால்இறுதியில் கால்பதிக்கும் இந்திய அணி, டார்விஷ் ரசூலி தலைமையிலான ஆப்கானிஸ்தானுடன் இன்று (திங்கட்கிழமை) மோதுகிறது. இந்த ஆட்டம் நிஷின் நகரில் அமைந்துள்ள கரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் ஸ்டேடியத்தில் நடக்கிறது.
கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், திலக் வர்மா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல் என முன்னணி வீரர்கள் அனைவரும் களம் இறங்குவதால் இந்திய அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.