ஆசிய விளையாட்டு அரைஇறுதி: இந்தியாவுக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சஹான் அரச்சிகே பந்துவீச்சை தேர்வு செய்தார்.
 ஆசிய விளையாட்டு அரைஇறுதி: இந்தியாவுக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு தேர்வு
Published on: 

டோக்கியோ,

45 நாடுகள் பங்கேற்றுள்ள 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் அய்ச்சி மாகா ணத்தில் உள்ள நகோயா நகரில் நடந்து வருகிறது. போட்டியின் 12-வது நாளான நேற்று இந் தியாவுக்கு மறக்க முடியாத, மகிழ்ச்சியான நாளாக அமைந்தது. வில்வித்தையில் 3, துப்பாக்கி சுடுதலில் 1 என ஒரே நாளில் இந்தியா 4 தங்கப்பதக்கத்தை வென்று பிரமிக்க வைத்தது.

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் ஆண்கள் பிரிவில் இன்று நடைபெறும் அரைஇறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சஹான் அரச்சிகே பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்தியா:

வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் அய்யர் , இஷான் கிஷன், திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா.

இலங்கை:

லசித் குரூஸ்புள்ளே, சினெத் ஜெயவர்தன, சோஹன் டி லிவேரா, அஷேன் பண்டார, சஹான் அராச்சிகே, நுவனிது பெர்னாண்டோ, சாமிக்க கருணாரத்னே, வனுஜா சஹான், விஜயகாந்த் வியாஸ்காந்த், தரிந்து ரத்நாயக்க, பினுர பெர்னாண்டோ.

X

Daily Thanthi
www.dailythanthi.com