ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட் இறுதிப்போட்டி - இந்தியா 216 ரன்கள் குவிப்பு

அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 79(45) ரன்கள் குவித்தார்.
ஆசிய விளையாட்டு
Published on

நகோயா,

இறுதிப்போட்டியில் இந்தியா 216 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியா - இலங்கை

20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

ஸ்மிருதி மந்தனா அதிரடி

அதன்படி, தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.

சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 45 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் அடங்கும். ஷபாலி வர்மா 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அவர் 3 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசினார்.

ரிச்சா கோஷ் அதிரடி

அதன்பின்னர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 17 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதிக்கட்டத்தில் ரிச்சா கோஷ் அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 49 ரன்கள் குவித்தார்.

அவருடன் பார்த்தி புல்மாலி 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

217 ரன்கள் இலக்கு

இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்க உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com