ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: ஸ்ரீ சரணி அபார பந்துவீச்சு... இந்தியாவுக்கு 58 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜப்பான்!

ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஆசிய விளையாட்டு போட்டி
Published on

நகோயா,

20-வது ஆசிய விளையாட்டு போட்டியின் பெண்கள் கிரிக்கெட் பிரிவில் இன்று நடைபெற்று வரும் காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணிக்கு ஜப்பான் 58 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆசிய விளையாட்டு

ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பெண்கள் கிரிக்கெட் போட்டியும் நேற்று தொடங்கியது. 20 ஓவர் வடிவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அனைத்து அணிகளும் நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

நடப்பு சாம்பியன் இந்தியா

நடப்பு சாம்பியனான இந்திய பெண்கள் அணி இன்று காலிறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ஜப்பான் அணியை எதிர்கொண்டுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, ஜப்பான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஸ்ரீ சரணி அபார பந்துவீச்சு

இந்திய பந்துவீச்சாளர்களின் அபாரமான செயல்பாட்டால் ஜப்பான் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணியால் இந்திய பந்துவீச்சை சமாளித்து பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.

இறுதியில் ஜப்பான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியின் ஸ்ரீ சரணி அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com