

கேப் டவுன்,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்டின் 2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும், 2வது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றிபெற்றன. இதனால், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற புள்ளி கணக்கில் சம நிலையில் உள்ளது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வரும் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 329 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் மார்கஸ் அகர்மென் அதிகபட்சமாக 95 ரன்கள் சேர்த்தார். ஆஸ்திரேலிய தரப்பில் மிச்சேல் ஸ்டார்க் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 330 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை விட 1 ரன் முன்னிலையில் ஆஸ்திரேலியா உள்ளது. சிறப்பாக ஆடி வரும் ஆஸ்திரேலிய வீரர்கள் ஜோஷ் இங்கிலீஷ் 85 ரன்களுடனும், அலெக்ஸ் கேரி 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் மார்கோ யான்சன், சிமன் ஹர்மர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இப்போட்டியில் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்ற இரு அணிகளும் போராடும் கடைசி டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஆட்டத்தில் இன்னும் 3 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.