

சென்னை,
ஆஸ்திரேலிய அணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. வரும் அக்டோபர் 9ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
2018-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது பந்தை சேதப்படுத்திய (Ball-Tampering) சம்பவம் உலக கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்களான டேவி வார்னர், ஸ்மித் மற்றும் கேமரன் பான்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, கிரிக்கெட் ஆஸ்திரேலியா கடும் நடவடிக்கை எடுத்து ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒரு வருட தடையும், பான்கிராப்டுக்கு ஒன்பது மாத தடையும் விதித்தது. இந்நிலையில், அந்த சர்ச்சைக்குப் பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணி மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.