

சென்னை,
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி சாதனை படைத்துள்ளது. அதிக ரன்கள் அடித்த அணிகள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது.
டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறன. அதன்படி, நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 255 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமால இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 17.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இப்போட்டியில் 254 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் அதிக ரன்கள் அடித்த அணிகள் பட்டியலில் 2வது இடத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னேறியது.