

டாக்கா,
வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியே கிரிக்கெட் அணி 3 ஒருநாள் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்நிலையில், இப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. வங்காளதேச அணியில் தவ்ஹித் ஹிரிதோய் 83 ரன்களும், லிட்டன் தாஸ் 58 ரன்களும், மொசடெக் ஹொசைன் 56 ரன்களும் எடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணியில் ரென்ஸா, பார்ட்லெட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் 275 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர் கூப்பர் கனோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் சதம் விளாசி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.கூப்பர் கனோலி 149 ரன்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியா 49.3 ஓவரில் 277 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா ஆறுதல் வெற்றி பெற்றது.