உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு...!

உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
Image Courtesy: @ICC
Image Courtesy: @ICC
Published on

மெல்போர்ன்,

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள அணிகள் தங்களது 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றன.

இதுவரை இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகள் உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியும் உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை இன்று அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு பேட் கம்மின்ஸ் தலைமை தாங்குகிறார். இந்த அணியில் டிம் டேவிட், மார்னஸ் லபுஸ்சாக்னே ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

உலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்:-

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்க்லிஸ், சீன் அப்போட், ஆஷ்டன் அகர், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா, மிட்செல் ஸ்டார்க்.

உலகக்கோப்பை தொடரில் தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை சென்னையில் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com