2-வது டி20 போட்டி: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இன்று மோதல்!

ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
2-வது டி20 போட்டி: ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இன்று மோதல்!
Published on: 

கோல்டு கோஸ்ட்,

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் இன்று கோல்டு கோஸ்டில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஆஸ்திரேலிய அணி

மெல்போர்னில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஹாரி புரூக் 28 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார். பின்னர் 188 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் நிகில் சவுத்ரி அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். ஜாக் எட்வர்ட்ஸ் 11 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார்.

முதல் போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது. அதேவேளையில், சொந்த மண்ணில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வெற்றியைத் தொடர்வதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் நோக்கத்தில் உள்ளது. இரு அணிகளும் அதிரடி வீரர்களைக் கொண்டிருப்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X