

பெர்த்,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் ஆடுகிறது. முதலில் ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பெர்த்தில் இன்று நடக்கிறது.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட், கனோலி, ரென்ஷா, ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன் என அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லை. வேகப்பந்து வீச்சாளர் 21 வயதான மஹ்லி பியர்ட்மேன் அறிமுக வீரராக களம் இறங்குகிறார். ஹாரி புரூக் தலைமை யிலான இங்கிலாந்து அணியில் பென் டக்கெட், டாம் பான்டன், ஜோ ரூட், வில் ஜாக்ஸ் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் இடம் பெற்றுள்ளனர். இது வேகத்துடன் கூடிய 'பவுன்ஸ்' ஆடுகளம் என்பதால், ஜோப்ரா ஆர்ச்சர் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இவ்விரு அணிகள் இதுவரை 162 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 92-ல் ஆஸ்திரேலியா வும், 65-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. 2 ஆட்டங்கள் சமனில் முடிந்தது. 3 ஆட்டங்களில் முடிவு கிடைக்க வில்லை. ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை யூரோ ஸ்போர்ட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.