2-வது டி20 : இங்கிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
tim david
Published on: 

கோல்டு கோஸ்ட்,

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

பேட்டிங்

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் 2-வது ஆட்டம் இன்று கோல்டு கோஸ்டில் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

முன்னிலை

மெல்போர்னில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

முதல் போட்டியில் தோல்வியடைந்த இங்கிலாந்து அணி, இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது. அதேவேளையில், சொந்த மண்ணில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி வெற்றியைத் தொடர்வதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் நோக்கத்தில் உள்ளது.

இதனால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X