36 இன்னிங்ஸ்... இன்னும் சதம் இல்லை - பந்துவீச்சாளர்களுடன் இணைந்த பாபர் அசாம்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
36 இன்னிங்ஸ்... இன்னும் சதம் இல்லை -  பந்துவீச்சாளர்களுடன் இணைந்த பாபர் அசாம்
Published on

லண்டன்,

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்டர் பாபர் அசாம் மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

8 ரன்களில் ஆட்டமிழப்பு

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 66.4 ஓவர்களில் 290 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு ஷான் மசூத் மற்றும் அப்துல்லா ஷபிக் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர்.

நெருக்கடியான சூழலில் களமிறங்கிய பாபர் அசாம், 10 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 8 ரன்கள் எடுத்த நிலையில், ஜோஷ் டங் வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் 2023-ம் ஆண்டுக்குப் பிறகு 36 டெஸ்ட் இன்னிங்ஸ்களாக சதம் அடிக்காமல் நீண்ட காலமாக சதம் அடிக்காத வீரர்கள் பட்டியலில் பிரபாத் ஜெயசூரியா மற்றும் தைஜுல் இஸ்லாம் ஆகிய பந்துவீச்சாளர்களுடன் பாபர் அசாம் இணைந்துள்ளார்.

110 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான்

பாபர் அசாமின் விக்கெட்டைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்து வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. இறுதியில் 37.2 ஓவர்களில் வெறும் 110 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதையடுத்து 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com