ஒருநாள் போட்டிகளில் ஹசிம் அம்லா சாதனையை முறியடித்தார் பாபர் அசாம்

நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

ரொட்டர்டாம்,

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாபர் அசாம் புதிய சாதனை படைத்துள்ளார். நெதர்லாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. ரொட்டர்டாம் நகரில் இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் எடுத்துள்ளது.பாபர் அசாம் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஃபக்கர் சமான், சதம் விளாசினர்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியுள்ள 88 இன்னிங்சில் பாபர் அசாம், 4481 ரன்கள் அடித்துள்ளார். இதற்கு முன்பு 88 இன்னிங்சில் தென்னாப்பிரிக்க வீரர் ஹசிம் அம்லா 4473 ரன்கள் அடித்ததே ஒருநாள் போட்டியில் சிறந்த சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை பாபர் அசாம் முறியடித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com