

பெங்களூரு,
ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி ரூ.16,700 கோடிக்கு விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.
இந்த அணியை ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆப் இந்தியா, போல்ட் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றியுள்ளன. இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு விற்கப்பட்ட அணியாக ஆர்.சி.பி உருவெடுத்துள்ளது.
இன்று மதியம் ராஜஸ்தான் அணி ரூ.15,290 கோடிக்கு விற்பனையாகி காஸ்ட்லி அணி எனப் பெயர் வாங்கியிருந்த நிலையில், ஆர்.சி.பி அதனை முறியடித்துள்ளது. அந்த அணியின் பங்குதாரர்களில் ஒருவரும் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபருமான கல் சோமானி அணியின் மொத்த பங்குகளையும் 1.6 பில்லியன் டாலருக்கு வாங்கி இருந்தார்.
ஆனால், அதனை முறியடித்து தற்போது ஆர்.சி.பி அணி மிக உயர்ந்த மதிப்பில் விற்பனையாகி புதிய வரலாறு படைத்துள்ளது.