ஆண்ட்ரே ரசலின் ஜெர்சிக்கு ஓய்வு

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரசல், கொல்கத்தா அணியின் 'பவர் கோச்' -ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆண்ட்ரே ரசலின் ஜெர்சிக்கு ஓய்வு
Published on

கொல்கத்தா ,

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் ஆல்-ரவுண்டர் ஆண்ட்ரே ரசலை (Andre Russell) கவுரவிக்கும் வகையில், அவர் அணிந்திருந்த 12-ம் எண் ஜெர்சிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக கொல்கத்தாவில் நடைபெற்ற 'நைட்ஸ் அன்ப்ளக்ட் 3.0' நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதே நிகழ்ச்சியில், அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் 2026 சீசனுக்கான துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரசல், 2026 சீசனில் கொல்கத்தா அணியின் 'பவர் கோச்' (Power Coach)-ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

Also Read
கொல்கத்தா அணியின் துணை கேப்டனாக ரிங்கு சிங் நியமனம்
ஆண்ட்ரே ரசலின் ஜெர்சிக்கு ஓய்வு

37 வயதான ரசல், கொல்கத்தா அணிக்காக மொத்தம் 133 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் 2014 மற்றும் 2024 ஆண்டுகளில் அணிக்கு சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com