3-வது ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்திய வங்காளதேசம்

வங்காளதேச அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்தை வென்றது.
3-வது ஒருநாள் கிரிக்கெட்:  நியூசிலாந்தை வீழ்த்திய வங்காளதேசம்
Published on

சட்டோகிராம்,

நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சட்டோகிராமில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்தது. நஜ்முல் ஹூசைன் ஷன்டோ (105 ரன்) சதமும், லிட் டான் தாஸ் (76 ரன்) அரைசதமும் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் வில்லியம் ஓ ரூர்கே 3 விக்கெட்டும், பென் லிஸ்டர். ஜெய்டன் லினாக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 44.5 ஓவர்களில் 210 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் வங்காளதேச அணி 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக டீன் பாக்ஸ்கிராப்ட் 75 ரன்னும், நிக் கெல்லி 59 ரன்னும், எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் முஸ்தாபிஜூர் ரகுமான் 5 விக்கெட்டும், நஹித் ராணா 2 விக்கெட்டும் சாய்த்தனர். 4-வது சதம் அடித்த வங்காள தேச வீரர் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் வங்காளதேச அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்தும், 2-வது ஆட்டத்தில் வங்காளதேசமும் வென்று இருந்தன. வங்காளதேச அணி தொடர்ச்சியாக வென்ற 3-வது ஒருநாள் தொடர் இதுவாகும். வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரையும் வென்றிருந்தது.

அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெறுகிறது. இதன் முதலாவது ஆட்டம் சட்டோகிராமில் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com