

ஹராரே,
வங்காளதேச கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வென்றது. இதையடுத்து நடந்த ஒருநாள் தொடரையும் 2-1 என்ற புள்ளி கணக்கில் ஜிம்பாப்வே கைப்பற்றியது.
இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே நடந்த முதல் டி20 போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி ஜிம்பாப்வே அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், ஜிம்பாப்வே, வங்காளதேசம் இடையேயான 2வது டி20 போட்டி புலாவாயோ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே 19.4 ஓவரில் 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் ஜிம்பாப்வேவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றிபெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-1 என்ற புள்ளி கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.