

சென்னை,
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் வேர்ல்ட் சேம்பியன்ஷிப் ஆப் லெஜண்ட்ஸ் (WCL) தொடரின் 3-வது சீசனில் (2026), புதிதாக 'வங்காளதேச சாம்பியன்ஸ்' அணி சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 6 அணிகள் இருந்த நிலையில், தற்போது 7-வது அணியாக வங்காளதேசம் இணைந்துள்ளது.
ஓய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள் மீண்டும் மைதானத்தில் களமிறங்கும் இந்த தொடர், உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 2026 சீசனில் புதிய அணியின் வருகையால், போட்டி மேலும் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முந்தைய வெற்றியாளர்கள்:
2024 (சீசன் 1): இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
2025 (சீசன் 2): தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றது.