

மெக்காய்,
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையே கடந்த 13ம் தேதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வங்காளதேசம் வரலாறு படைத்தது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா - வங்காளதேசம் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி மெக்காய் நகரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய வங்காளதேசம் 12 ரன்கள் எடுத்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் தமீம், இஸ்லாம், கேப்டன் நஜ்முல் ஹசன் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் (0) அவுட் ஆகினர். மொனிநுல் 9 ரன்னிலும், லிண்டன் தாஸ் ரன் எதுவும் எடுக்காமலும் (0) அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.
சிறப்பாக பந்து வீசிய ஆஸ்திரேலிய வீரர் மிச்செல் ஸ்டார்க் 5 ரன்களை மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.