

புதுடெல்லி,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள சமீபத்திய டெஸ்ட் தரவரிசையில் வங்காளதேச அணி 6-வது இடத்தை பிடித்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்ததைத் தொடர்ந்து, வங்காளதேச அணி தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறியுள்ளது.
தற்போது 78 ரேட்டிங் புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்துள்ள வங்காளதேசம், டெஸ்ட் தரவரிசையில் இதுவரை 9-வது இடத்திற்கு மேல் முன்னேறியதில்லை. இந்நிலையில், முதல்முறையாக 6-வது இடத்தை பிடித்துள்ளது.
இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகளை வங்காளதேசம் பின்னுக்கு தள்ளியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய மண்ணில் வங்கதேசம் பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். அந்த வெற்றியில் ஹசன் மஹ்மூத் 6 விக்கெட்டுகளையும், தன்சித் ஹாசன் தமீம் சதமும் அடித்து முக்கிய பங்காற்றினர்.
2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்பட்டு இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.
ஆஸ்திரேலியாவின் வெற்றியில் மிட்செல் ஸ்டார்க் முக்கிய பங்காற்றினார். அவர் போட்டியில் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இந்த தொடரை சமன் செய்ததன் மூலம் வங்கதேசம் டெஸ்ட் தரவரிசையில் 6-வது இடத்திற்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.