ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்காளதேச அணி அறிவிப்பு

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

டாக்கா,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரின் ஆட்டங்கள் முறையே சில்ஹெட் மற்றும் சட்டோகிராமில் நடக்கிறது.

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான அந்த அணியில் முன்னணி வீரரான முஷ்பிகுர் ரஹீம் இடம் பெற்றுள்ளார்.

வங்காளதேச அணி விவரம் பின்வருமாறு:-

நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், மஹிதுல் இஸ்லாம் புய்யான் அன்கான், ஜேக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், நஹித் ராணா, ஹசன் மஹ்மூத், சையத் காலித் அகமது, தன்சிம் ஹசன் சாகிப்

போட்டி அட்டவணை விவரம்:

முதல் டெஸ்ட் போட்டி: ஏப்ரல் 20-24 - சில்ஹெட்

2வது டெஸ்ட் போட்டி: ஏப்ரல் 28 - மே 02 - சட்டோகிராம்

X

Daily Thanthi
www.dailythanthi.com