

டாக்கா,
வங்காளதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியே கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-0 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது. டாக்காவில் இன்று காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்ற வங்காளதேசமும், ஆறுதல் வெற்றிபெற ஆஸ்திரேலியாவும் முனைப்புகாட்டும் என்பதால் இப்போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.