முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு

டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் டெஸ்ட்: டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு
Published on: 

தென்னாப்பிரிக்கா – வங்கதேசம் அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று (நவம்பர் 15) ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய உற்சாகத்துடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்குகிறது. மறுபுறம், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப் பிறகு தென்னாப்பிரிக்க மண்ணில் சவாலை எதிர்கொள்ள வங்கதேச அணி தயாராகியுள்ளது

டாஸ்

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

X