பிசிசிஐ ஆண்டு ஒப்பந்த பட்டியல்: ரோகித், விராட் ‘பி’ பிரிவுக்கு மாற்றம்

'ஏ பிளஸ்' பிரிவை பிசிசிஐ இம்முறை ரத்து செய்துள்ளது.
பிசிசிஐ ஆண்டு ஒப்பந்த பட்டியல்:  ரோகித், விராட் ‘பி’ பிரிவுக்கு மாற்றம்
Published on

சென்னை,

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) 2025-26ஆம் ஆண்டிற்கான இந்திய வீரர்களின் வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வழக்கமாக வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த அங்கீகாரமான 'ஏ பிளஸ்' (A+) பிரிவை பிசிசிஐ இம்முறை ரத்து செய்துள்ளது. அதற்குப் பதிலாக 'கிரேட் ஏ' பிரிவுதான் இனி உயர்ந்த பிரிவாகக் கருதப்படும்.

இந்திய கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திரங்களாக கருதப்படும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் 'கிரேட் பி' பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது ஒருநாள் போட்டிகளில் (ODI) மட்டுமே விளையாடி வருவதால் (டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதைக் கருத்தில் கொண்டு), இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்பு மிக உயர்ந்த பிரிவில் இருந்த இவர்கள், தற்போது இரண்டாம் கட்டப் பிரிவிற்குச் சென்றுள்ளது ரசிகர்களுக்குச் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூத்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஒப்பந்தப் பட்டியலிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளனர். அதேபோல, இஷான் கிஷனுக்கும் இந்த ஆண்டு ஒப்பந்தப் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை.

Also Read
20 ஓவர் உலக கோப்பை: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் முடிவு
பிசிசிஐ ஆண்டு ஒப்பந்த பட்டியல்:  ரோகித், விராட் ‘பி’ பிரிவுக்கு மாற்றம்

பிசிசிஐ புதிய ஒப்பந்தப் பட்டியல் விவரம்:

கிரேட் ஏ: (ஆண்டுக்கு ரூ.7 கோடி): சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா.

கிரேட் பி: (ஆண்டுக்கு ரூ.5 கோடி): ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், வாஷிங்டன் சுந்தர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, முகமது சிராஜ், ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் ஐயர்.

கிரேட் சி: (ஆண்டுக்கு ரூ.1 கோடி): அக்சர் படேல், திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே, சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், துருவ் ஜூரல், ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி, நித்திஷ் குமார் ரெட்டி, அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன், ரவி பிஷ்னோய், ருதுராஜ் கெயிக்வாட்.

இந்த ஒப்பந்தம் இந்தாண்டு செப்டம்பர் 30 வரை அமலில் இருக்கும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com