2022 ஐபிஎல் போட்டிகள் எங்கு நடைபெறும்: சவுரவ் கங்குலி பதில்

15-வது ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் இறுதியில் தொடங்கி நடைபெற உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

15-வது ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த சீசனுக்கான மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 இல் பெங்களூரில் நடைபெற உள்ளது.

நாட்டில் கொரோனா பரவல் தற்போது ஓரளவு குறைந்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் எங்கு நடைபெறும் என கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடம் குறித்து பதிலளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, நிலைமை சாதமாக அமையும் பட்சத்தில் போட்டிகள் இந்தியாவில் நடைபெறும். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, புனே ஆகியவற்றில் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். நாக்அவுட் போட்டிக்கான இடங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை.

போட்டி நடைபெறும்போது, மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி இருக்குமா என்பது குறித்த தகவல்களை கங்குலி தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com