ஐபிஎல்: 'இம்பாக்ட் பிளேயர்' விதி... இந்த சீசனுக்குப் பிறகு மறுஆய்வு - பிசிசிஐ தகவல்

2023-ல் அறிமுகமான இந்த விதியால் 200-க்கு மேல் ரன்கள் எடுப்பது சாதாரணமாகிவிட்டது.
ஐபிஎல்: 'இம்பாக்ட் பிளேயர்' விதி... இந்த சீசனுக்குப் பிறகு மறுஆய்வு -  பிசிசிஐ தகவல்
Published on

மும்பை,

ஐபிஎல் தொடரில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள 'இம்பாக்ட் பிளேயர்' (Impact Player Rule) விதி குறித்து, இந்த சீசன் முடிந்தவுடன் பிசிசிஐ மறுஆய்வு செய்யும் என அதன் செயலாளர் தேவஜித் சைக்கியா உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "இந்த விதி குறித்த விவாதம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. எனினும், ஒரு தொடரின் பாதியில் எந்த முடிவும் எடுக்க முடியாது. மே 31-ஆம் தேதி தொடர் முடிந்ததும் இது குறித்து ஆய்வு செய்வோம்," என்று அவர் தெரிவித்தார்.

Also Read
சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் அதிரடி... பஞ்சாப்பை வீழ்த்திய குஜராத்
ஐபிஎல்: 'இம்பாக்ட் பிளேயர்' விதி... இந்த சீசனுக்குப் பிறகு மறுஆய்வு -  பிசிசிஐ தகவல்

மேலும், இதுவரை எந்த ஐபிஎல் நிர்வாகமும் (Franchises) இந்த விதியை நீக்கக் கோரி அதிகாரபூர்வமாகப் புகார் அளிக்கவில்லை என்றும் பிசிசிஐ தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து போட்டிகளில் உள்ள 'சப்ஸ்டிடியூட்' முறையைப் போல 2023-இல் அறிமுகமான இந்த விதி, டி20 கிரிக்கெட்டின் இலக்கணத்தையே மாற்றியுள்ளது. இந்த விதியால் 200-க்கு மேல் ரன்கள் எடுப்பது சாதாரணமாகிவிட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com