பென் கரன் சதம்: வங்காளதேச அணிக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே அணியில் அபாரமாக விளையாடி பென் கர்ரன் 111 ரன்னும், பிராட் இவான்ஸ் 58 ரன்னும் எடுத்தனர்
பென் கரன் சதம்: வங்காளதேச அணிக்கு 248 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே
Published on

ஹராரே,

வங்கதேச அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 85 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது.

அடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. இந்த போத்திகான் டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற வங்காளதேச அணியின் கேப்டன் மெஹிதி ஹசன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், ஜிம்பாப்வே அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்துள்ளது. ஜிம்பாப்வே அணியில் அபாரமாக விளையாடி பென் கர்ரன் 111 ரன்னும், பிராட் இவான்ஸ் 58 ரன்னும் எடுத்தனர்.வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com