பென் ஸ்டோக்ஸ் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய வரலாறு

ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாட முயற்சித்தார்.
பென் ஸ்டோக்ஸ் சாதனையை முறியடித்தார் ரிஷப் பண்ட்... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் புதிய வரலாறு
Published on: 

இந்திய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வைத்திருந்த சாதனையை முறியடித்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 356 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 5-வது வீரராக களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாட முயற்சித்தார்.

ரிஷப் பண்ட்

குறிப்பாக பென் ஸ்டோக்ஸ் 64 டெஸ்ட் போட்டிகளில் 88 சிக்ஸர்கள் அடித்திருந்த நிலையில், ரிஷப் பண்ட் வெறும் 44 போட்டிகளில் 89 சிக்ஸர்கள் அடித்து இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் குறைவான போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்து புதிய மைல்கல்லையும் எட்டியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட் முதலிடத்திலும், பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 56 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். சுப்மன் கில் 48 சிக்ஸர்களுடன் 4-வது இடத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 45 சிக்ஸர்களுடன் 5-வது இடத்திலும் உள்ளனர்

X