பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடர்: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி

கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.
பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடர்: மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி
Published on

ஆஸ்திரேலியா,

ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள் பிக்பாஷ் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்பேன் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கோபர்ட் ஹூரிகேன்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.அந்த அணியில் அதிகபட்சமாக பென் மேக்டெர்மொட் 43 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார்.

இதை தொடர்ந்து மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.அந்த அணியின் ஜோ கிளார்க் 40 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அந்த அணியின் கேப்டன் கிளென் மெக்ஸ்வெல் 12 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சோபிக்காத நிலையில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இதன் மூலம் கோபர்ட் ஹூரிகேன்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com