பிக் பாஷ் லீக்: பிரிஸ்பேன் ஹீட் அணியில் டாம் கரன்

அந்த அணியின் முதல் வெளிநாட்டு வீரர் ஒப்பந்தமாகும்.

பிக் பாஷ் லீக்:  பிரிஸ்பேன் ஹீட் அணியில் டாம் கரன்
Published on

சிட்னி,

பிரிஸ்பேன் ஹீட் அணி, 2026–27 பிக் பாஷ் தொடருக்காக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் டாம் கரனை ஒப்பந்தம் செய்துள்ளது. இது அந்த அணியின் முதல் வெளிநாட்டு வீரர் ஒப்பந்தமாகும்.

டாம் கரன் ஒரு ஆண்டு ஒப்பந்தத்தில் பிரிஸ்பேன் ஹீட் அணியில் இணைந்துள்ளார். இதன் மூலம் அவர் பிக் பாஷில் விளையாடும் மூன்றாவது அணியாக பிரிஸ்பேன் ஹீட் மாறுகிறது. இதற்கு முன்பு அவர் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

டாம் கரன் இதுவரை பிக் பாஷில் 52 போட்டிகளில் விளையாடி, 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி 20.61 ஆக உள்ளது.கடந்த சீசனில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடியபோது, அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு எதிராக 10 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் வீழ்த்தியது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com