

சென்னை,
ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமானது பிக்பாஷ் லீக் (20 ஓவர்) கிரிக்கெட் போட்டியாகும். இந்த போட்டியில் 8 அணி கள் பங்கேற்கின்றன. இந்த ஆண்டுக்கான (16-வது) பிக் பாஷ் லீக் தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ், மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் டிசம்பர் 12-ந் தேதி நடக்கிறது. பிக்பாஷ் லீக் ஆட்டம் வெளிநாட்டில் அரங்கேறு வது இதுவே முதல்முறையாகும்.
இந்த போட்டி குறித்து பிக்பாஷ் லீக் (பி.பி.எல்.) செயல்பாடு கள் மற்றும் கிளப் வளர்ச்சி பிரிவு தலைவர் பில் ரிக்பி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் 'நாங்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டோடு போட்டி போடுவதற்காக இங்கு வரவில்லை. இந்தியாவுக்கும். ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான உறவை எப்படி மேலும் வலுப்படுத்தலாம் என்பது குறித்து இரு தரப்பு அரசாங்கமும் ஆலோ சித்து எடுத்த நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே இந்த போட்டி இங்கு நடைபெற இருகிறது. பிக்பாஷ் லீக் போட்டிக்கு என்று தனித்துவமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பிக்பாஷ் லீக்கில் ஐ.பி.எல். மற்றும் மற்ற லீக் போட்டிகளை காட்டிலும் அதிக விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகை யிலான சில விதிமுறைகள் இருக்கின்றன. எங்களது பிக்பாஷ் போட்டியின் சிறந்த அனுப வத்தை சென்னைக்கு கொண்டு வர விரும்புகிறோம். பிக்பாஷ் லீக்கின் தொடக்க ஆட்டம் சென்னையில் இந்த ஒரு முறை மட்டுமே நடைபெறும் என்று நாங்கள் நினைக்கவில்லை. முதலில் நாம் முதல் போட்டியை நடத்தி முடிக்க வேண்டும். அதன் பிறகு வருங்காலத்தை பற்றி கவலைப்படலாம். நாங்கள் வருங்காலத்தில் இந்த போட்டியை இங்கு தொடர்ந்து நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம். இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் பேசுவோம். இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும்' என்று தெரிவித்தார்.