பிக்பாஷ் லீக் கிரிக்கெட்: புகை மூட்டம் காரணமாக ஆட்டம் ரத்து

புகை மூட்டம் காரணமாக பிக்பாஷ் லீக் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
பிக்பாஷ் லீக் கிரிக்கெட்: புகை மூட்டம் காரணமாக ஆட்டம் ரத்து
Published on

கான்பெர்ரா,

பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் கான்பெர்ராவில் நேற்று நடந்த ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ்-சிட்னி தண்டர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த அடிலெய்டு அணி 5 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய சிட்னி தண்டர் அணி 4.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 40 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள காட்டில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் ஏற்பட்ட புகை மண்டலம் மைதானத்தில் முழுமையாக பரவியது. இதனால் வீரர்கள் பந்தை சரியாக பார்த்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. போட்டியை தொடர்ந்து நடத்தக்கூடிய சூழ்நிலை இல்லாததை உணர்ந்த நடுவர்கள் போட்டி அத்துடன் கைவிடப்படுவதாக அறிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com