கொரோனா குறைந்தவுடன் உள்ளூர் போட்டிகள் மீண்டும் நடத்தப்படும்: சவுரவ் கங்குலி

கொரோனா பரவல் காரணமாக உள்ளூர் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

நாட்டில் கொரோனா பரவல் திடீரென மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் உள்ளூரில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் உள்ளூர் போட்டிகள் நிலைமை கட்டுக்குள் வந்ததும் நடத்தப்படும்' என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com