இந்திய அணியின் தேர்வு குழு பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று குறைந்தது 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்.
இந்திய அணியின் தேர்வு குழு பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Published on: 

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட்டின் 5 பேர் கொண்ட தேர்வு குழுவுக்கு முன்னாள் வீரர் அஜித் அகர்கர் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் கடந்த 4-ந்தேதி யுடன் முடிவடைந்தது. பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அவரது இடத்தை நிரப்ப அணியின் தேர்வு குழுவில் ஒரு பதவிக்கு தகுதியா னவர்கள் விண்ணப்பிக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

விண்ணப்பிக்க வருகிற 14-ந்தேதி கடைசி நாளாகும். குறைந்தது 7 டெஸ்ட், 30 முதல்தர போட்டிகள் அல்லது 10 ஒரு நாள் மற்றும் 20 முதல்தர போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று குறைந்தது 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். இத்தகைய நபர்கள் தேர்வு குழு பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com