ரோகித் சர்மா வழங்கிய கேப்டன்சி ஆலோசனை – ஆயுஷ் மாத்ரே தகவல்

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனக்கு வழங்கிய ஆலோசனைகள் குறித்து பகிர்ந்துள்ளார்.
ரோகித் சர்மா வழங்கிய கேப்டன்சி ஆலோசனை – ஆயுஷ் மாத்ரே தகவல்
Published on: 

மும்பை,

இந்திய இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, யு19 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டபோது, முன்னாள் இந்திய கேப்டன் ரோகித் சர்மா தனக்கு வழங்கிய ஆலோசனைகள் குறித்து பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஐபிஎல் முடிந்த பிறகு, என்னை யு19 அணியின் கேப்டனாக நியமித்தார்கள். அதைப் பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை. அதனால் ரோகித் சர்மா பாய்க்கு மெசேஜ் செய்தேன். ஐபிஎல் நேரத்தில் எப்போது பேச வேண்டுமென்றாலும் அழைக்கலாம் அல்லது மெசேஜ் செய்யலாம் என்று அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.அவர் எனக்கு அழைத்தார். அவரை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று சொன்னேன். உடனே வீட்டிற்கு வரச் சொன்னார். அங்கு அவருடன் நீண்ட நேரம் பேசினேன். கேப்டனாக அணியை எப்படி வழிநடத்த வேண்டும், அணியை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து மிகவும் தெளிவாக விளக்கினார்.அவர் தனது நேரத்தை ஒதுக்கி என்னிடம் நிறைய பேசினார். என் அப்பாவுடனும் சுமார் அரை மணி நேரம் பேசினார். அவர் மிகவும் எளிமையானவர். எப்போதும் பேசுவதற்கு தயாராக இருப்பார் என தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com