

லண்டன்,
10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்சில் வருகிற ஜூன் 12-ந் தேதி முதல் ஜூலை 5-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்காக 12 அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன.
இந்த நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பை தொடங்க உள்ள நிலையில் இன்று 12 அணிகளின் கேப்டன்களும் சந்தித்தனர். பின்னர் கேப்டன்கள் டி20 உலகக் கோப்பையுடன் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.