

செயின்ட் கிட்ஸ்,
14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவிருந்த 21வது லீக் ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் அணிகள் மோத இருந்தன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற அன்டிகுவா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி வீரர்கள் முதலில் பேட்டிங் செய்ய இருந்தனர். ஆனால், திடீரென மழை பெய்தது. இதனால், ஆட்டம் தடைபட்டது. நீண்ட நேரமாக மழை நீடித்ததால் இறுதியில் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.