கரீபியன் பிரீமியர் லீக்: பார்படோசுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அன்டிகுவா

டாஸ் வென்ற பார்படோஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
கரீபியன் பிரீமியர் லீக்:  பார்படோசுக்கு 156 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அன்டிகுவா
Published on

அன்டிகுவா,

கரீபியன் பிரீமியர் லீக்

14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன.

அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் - பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் மோதல்

இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்று வரும் 16வது லீக் ஆட்டத்தில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் - பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற பார்படோஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய அன்டிகுவா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பார்படோஸ் களமிறங்கி விளையாடி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com