கரீபியன் பிரீமியர் லீக்: ஜமைக்காவை வீழ்த்தி பார்படோஸ் அபார வெற்றி

டாஸ் வென்ற ஜமைக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
கரீபியன் பிரீமியர் லீக்: ஜமைக்காவை வீழ்த்தி  பார்படோஸ் அபார வெற்றி
Published on

டிரினிடாட்,

கரீபியன் பிரீமியர் லீக்

14வது கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 7ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 கிரிக்கெட் தொடரில் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ், பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், செயின்ட் லூசியா கிங்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ், ஜமைக்கா கிங்ஸ்மென் ஆகிய 7 அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஜமைக்கா கிங்ஸ்மென் - பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் மோதல்

இந்நிலையில், கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா கிங்ஸ்மென் - பார்படோஸ் ட்ரைடென்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பார்படோஸ் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பிரண்டன் கிங் 73 ரன்கள் குவித்தார்.

பார்படோஸ் வெற்றி

இதனை தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜமைக்கா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஜமைக்காவை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பார்படோஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய பார்படோஸ் வீரர் டேனியல் சாம்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com