சாம்பியன்ஸ் டிராபி: கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி..?


சாம்பியன்ஸ் டிராபி: கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி..?
x

Image Courtesy: @BCCI

தினத்தந்தி 9 March 2025 10:45 AM IST (Updated: 9 March 2025 10:46 AM IST)
t-max-icont-min-icon

நடப்பு தொடரில் இந்திய வீரர் விராட் கோலி ஒரு சதம், அரைசதம் உள்பட 217 ரன்கள் எடுத்துள்ளார்.

துபாய்,

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 19-ந்தேதி பாகிஸ்தானில் தொடங்கியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டது.

8 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் லீக் சுற்றை தாண்டவில்லை.

ஐ.சி.சி. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்தியா- நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இறுதிப்போட்டியை முன்னிட்டு இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நடப்பு தொடரில் இந்திய வீரர் விராட் கோலி ஒரு சதம், அரைசதம் உள்பட 217 ரன்கள் எடுத்துள்ளார். இதையும் சேர்த்து சாம்பியன்ஸ் கோப்பையில் அவரது மொத்த ரன்கள் எண்ணிக்கை 746-ஆக (17 ஆட்டம்) உயர்ந்துள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்லை (791 ரன்) முந்துவதற்கு கோலிக்கு இன்னும் 46 ரன் தேவை. எனவே இன்றைய ஆட்டத்தில் கெய்லின் சாதனையை கோலி முறியடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.

1 More update

Next Story