கையுறையை மாற்றினார், டோனி

தனது ராணுவ முத்திரை பதித்த கையுறையை டோனி மாற்றினார்.
கையுறையை மாற்றினார், டோனி
Published on

லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தின் போது இந்திய விக்கெட் கீப்பர் டோனி ராணுவ முத்திரை பதித்த கையுறையை (குளோவ்ஸ்) பயன்படுத்தியது சர்ச்சையை கிளப்பியது. இத்தகைய முத்திரையுடன் கூடிய கையுறையை பயன்படுத்துவது விதிமுறைகளுக்கு எதிரானது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து நேற்றைய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் டோனி தனது கையுறையை மாற்றி விட்டார். அதில் எந்த விதமான லோகோவும் இல்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com