சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றம்; பயிற்சியாளர்கள் அதிரடியாக விடுவிப்பு

20வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
சென்னை பயிற்சியாளர்கள்
Published on: 

சென்னை,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஐபிஎல்

20வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடர் நெருங்கி வரும் நிலையில் வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதனிடையே, அணிகளும் பல்வேறு மாற்றங்களை அமல்படுத்தி வருகின்றன.

அதிரடி முடிவுகள்

அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. அதன்படி, தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீவன் பிளமிங் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும், சென்னை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கான் நியமனம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து பல்வேறு அதிரடி அறிவிப்புகளை சென்னை அணி நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.

சென்னை பயிற்சியாளர்கள்
சென்னை பயிற்சியாளர்கள்

பயிற்சியாளர்கள் விடுவிப்பு

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த மைக்கேல் ஹசி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பவுலிங் பயிற்சியாளர் எரிக் சைமன்ஸ் மற்றும் அணியின் பிற பயிற்சியாளர்களான டாமி சிம்சக், கிரேக் கிங், ராஜீவ் குமார் ஆகியோரும் சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com